புதன், 12 டிசம்பர், 2018

11. நாடிப் பொருத்தம்


நாடிப் பொருத்தம்


              மேற்க்கண்ட தசவிதப் பொருத்தங்களுடன் நாடிப் பொருத்தத்தையும் சேர்த்து பார்த்தல் வேண்டும்.  நாடிப் பொருத்தம் மருத்துவத்தில் அறியப்படும் வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் எனும் மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டு இருபத்தேழு நட்சத்திரங்களையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவை 1) வாதம், 2) பித்தம் 3) சிலேத்துமம் இப்பொருத்தம் இருவரும் நோய் தொந்தரவுகளின்றி ஆரோக்கியமாக வாழ இப்பொருத்ததைப் பார்க்கிறோம்.

                          வாத நாடி          பித்த நாடி              சிலேத்தும நாடி
Ø  அசுவனி                      பரணி                       கார்த்திகை
Ø  திருவாதிரை             மிருகசீரிஷம்          ரோகிணி
Ø  புனர்பூசம்                   பூசம்                          ஆயில்யம்
Ø  உத்திரம்                      பூரம்                          மகம்
Ø  ஹஸ்தம்                      சித்திரை                  சுவாதி
Ø  கேட்டை                       அனுஷம்                  விசாகம்
Ø  மூலம்                           பூராடம்                    உத்திராடம்
Ø  சதயம்                          அவிட்டம்                 திருவோணம்
Ø  பூரட்டாதி                    உத்திரட்டாதி         ரேவதி

              இருவருக்கும் ஒரே நாடியாக அமைந்தால் பொருத்தம் இல்லை. வெவ்வேறு நாடியாக இருந்தால் மட்டுமே பொருத்தம் உண்டு.
              மேற்கண்ட தசாவித பொருத்தங்கள் மற்றும் நாடிப் பொருத்தம் ஆண், பெண் சரீர ஒற்றுமைக்காக பார்க்கப்படுகிறது. என்வே இருவரின் ஜாதகங்களை மேற்கண்ட வகையில் ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்ய வேண்டும்.
  

10. வேதைப் பொருத்தம்


வேதைப் பொருத்தம்


              வேதை என்றால் இடையூறு, தொந்தரவு என்று பொருள். இருபத்தேழு நட்சத்திரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு வேதை நட்சத்திரம் உண்டு. அவ்வாறு வேதை நட்சத்திரங்களை இணைக்கக் கூடாது.
              இது தம்பதிகளிடையே இன்ப துன்பங்களை ஒருவருக்கொருவர் அனுசரித்து சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாக மன தைரியத்துடன் குடும்பம் நடத்த இப்பொருத்தம் பார்க்கப் படுகிறது.

 வேதை நட்சத்திரங்கள்
              ஒரு நட்சத்திரத்திற்கு அது நிற்கும் இராசிக்கு ஆறாவது அல்லது எட்டாவது இராசியில் நிற்கும் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக அமையும்.
Ø  அசுவனி           X      கேட்டை
Ø  பரணி               X      அனுஷம்
Ø  கார்த்திகை     X     விசாகம்
Ø  ரோகிணி        X      சுவாதி
Ø  திருவாதிரை   X     திருவோணம்
Ø  புனர்பூசம்       X      உத்திராடம்
Ø  பூசம்                  X      பூராடம்
Ø  ஆயில்யம்       X      மூலம்
Ø  மகம்                  X      ரேவதி
Ø  பூரம்                  X      உத்திரட்டாதி
Ø  உத்திரம்          X      பூரட்டாதி
Ø  ஹஸ்தம்          X      சதயம்
Øசெவ்வாயின் நட்சத்திரங்களான் மிருகசீரிசம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகியன மட்டும் ஒன்றுக்கொன்று வேதையாகும்.

9. இரஜ்ஜு பொருத்தம்


இரஜ்ஜு பொருத்தம்



              ஆண் பெண் இருவரும் தீர்க்காயுளுடன் வாழ இப்பொருத்தம் மிக அவசியம். தசவிதப் பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தம் ஆகும். ஏனைய அனைத்து பொருத்தங்கள் இருப்பினும் இப்பொருத்தம் இல்லையெனில் அவ்விரு ஜாதகங்களை இணைக்கக் கூடாது. இதனை மாங்கல்யப் பொருத்தம் என்றும் அழைப்பர்.
              இரஜ்ஜு ஐந்து வகைப்படும். அவை சிரசு இரஜ்ஜு, கண்ட இரஜ்ஜு, வயிறு இரஜ்ஜு, தொடை இரஜ்ஜு மற்றும் பாத இரஜ்ஜு என்பனவாகும். இருபத்தேழு நட்சத்திரங்களையும் இவ்வைந்து வகை இரஜ்ஜுக்குள் வகைப்படுத்தி உள்ளனர்.
Ø ஆண், பெண் இருவருக்கும் ஒரே இரஜ்ஜுவானால் பொருத்தம் இல்லை.
Ø ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு இரஜ்ஜுவானால் பொருத்தம் உண்டு.
     பொதுவாக இப்பொருத்தம் இல்லையெனில் தம்பதியருக்கு ஆயுள் பங்கம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு பொருந்தாத ஜாதகங்களை இணைக்காமல் இருப்பதே உத்தமம்.

சிரசு இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø  செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் என்பனவாகும்.

கண்ட இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் என்பனவும்,
Ø இராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம்
    ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கண்ட இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

வயிறு இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் என்பனவும்,
Ø  குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி
    ஆகிய ஆறு நட்சத்திரங்களும் வயிறு இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

தொடை இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம் மற்றும் பூராடம் என்பனவும்,
Ø சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி
  ஆகிய ஆறு நட்சத்திரங்களும் தொடை இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

பாத இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø கேதுவின் நட்சத்திரங்களான அசுவனி, மகம் மற்றும் மூலம் என்பனவும்,
Ø  புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி
 ஆகிய ஆறு நட்சத்திரங்களும் பாத இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

8. வசியப் பொருத்தம்


 வசியப் பொருத்தம்


              ஆண் பெண் இருவருக்கும் இடையே சிறப்புமிக்க வலுவான உறவு அமையவும், ஒருவருக்கு ஒருவர் வசியமுடன் வாழவும், ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாகவும், வேறு துணையை மனதாலும் நினைக்காமல் இருக்க இப்பொருத்ததைப் பார்க்கிறோம்.
              பன்னிரு இராசிகளும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இராசிகளுக்கு வசியத்திற்கு உட்பட்டு இருக்கும். அவ்வாறு அமையும் வசிய இராசிகளாக இருவருக்கும் அமையந்தால் பொருத்தம் உண்டு.

Ø  பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமானால் உத்தமம்.
Ø  ஆண் இராசிக்கு பெண் இராசி வசியமானால் மத்திமம்.
Øஇருவர் இராசியும் ஒன்றுக்கொன்று வசியம் இல்லையெனில் அதமம்.

வசிய இராசிகள்
Ø  மேஷம்                 - சிம்மம், விருச்சிகம்
Ø  ரிஷபம்                - கடகம்
Ø  மிதுனம்               - கன்னி
Ø  கடகம்                  - தனுசு, விருசிகம்
Ø  சிம்மம்                 - துலாம்
Ø  கன்னி                  - மீனம், மிதுனம்
Ø  துலாம்                  - மகரம், கன்னி
Ø  விருச்சிகம்         - கடகம்
Ø  தனுசு                    - மீனம்
Ø  மகரம்                   - மீனம்
Ø  கும்பம்                 - கன்னி
Ø  மீனம்                    - மேஷம்

7. இராசி அதிபதிப் பொருத்தம்


1.      இராசி அதிபதிப் பொருத்தம்
              குடும்ப ஒற்றுமைக்கும், எண்ண ஒற்றுமைக்கும், செழிப்பான வாழ்விற்கும், சந்ததிகள் சிறப்புறவும், சம்பந்திகளின் நட்பு நிலையினை அறியவும் பார்க்கிறோம்.
Ø பெண் இராசி அதிபதியும் ஆண் இராசி அதிபதியும் ஒருவருக்கொருவர் நட்பு ஆனாலும் , சமம் ஆனாலும் உத்தமம்.
Ø பெண் இராசி அதிபதியும் ஆண் இராசி அதிபதியும் ஒருவருக்கொருவர் பகை ஆனால் பொருத்தம் இல்லை.

மேஷம், விருச்சிகம்
  மேஷம் மற்றும் விருச்சிக இராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  சூரியன், சந்திரன் மற்றும் குரு
Ø  சமம்                -  சுக்கிரன் மற்றும் சனி
Ø  பகை               -  புதன்

ரிஷபம், துலாம்
  ரிஷபம் மற்றும் துலாம் இராசிகளின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  புதன் மற்றும் சனி
Ø  சமம்                -  செவ்வாய் மற்றும் குரு
Ø  பகை               -  சூரியன் மற்றும் சந்திரன்

மிதுனம், கன்னி
  மிதுனம் மற்றும் கன்னி இராசிகளின் அதிபதி புதன் ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  சூரியன் மற்றும் சுக்கிரன்
Ø  சமம்                -  செவ்வாய், குரு மற்றும் சனி
Ø  பகை               -  சந்திரன்

கடகம்
  கடக இராசியின் அதிபதி சந்திரன் ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  சூரியன் மற்றும் புதன்
Ø  சமம்                -  செவ்வாய், குரு,சுக்கிரன் மற்றும் சனி

சிம்மம்
  சிம்ம இராசியின் அதிபதி சூரியன் ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  சந்திரன்,செவ்வாய் மற்றும் குரு
Ø  சமம்                -  புதன்
Ø  பகை               -  சுக்கிரன் மற்றும் சனி

மகரம், கும்பம்
  மகரம் மற்றும் கும்ப இராசிகளின் அதிபதி சனி ஆவார். இவருக்கு,
Ø  நட்பு                -  புதன் மற்றும் சுக்கிரன்
Ø  சமம்                -  குரு
Ø  பகை               -  சூரியன் மற்றும் சந்திரன்

6. இராசிப் பொருத்தம்


இராசிப் பொருத்தம்


           ஆண் பெண் இருவருக்கும் இடையேயான ஒற்றுமை, குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாருடன் ஒற்றுமையான, இணக்கமான, சுமூகமான உறவுமுறை பற்றி அறிய இப்பொருத்ததைப் பார்க்கிறோம்.
Ø பெண் இராசிக்கு ஆண் இராசி ஆறு இராசிக்கு மேல்வரின் உத்தமம்.
Ø     இருவருக்கும் ஒரே இராசியானாலும் பொருத்தம் உண்டு.
Ø பெண் இராசிக்கு ஆண் இராசி சஷ்டாஷ்டகமாக அதாவது 6 அல்லது 8 வது இராசியாகவரின் அவ்விரு ஜாதகங்களையும் இணைத்தல் கூடாது. ஏனெனில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினையை ஏற்படுத்த அதிகமான வாய்ப்புகள் உண்டு.

5. யோனிப் பொருத்தம்


யோனிப் பொருத்தம்


              ஆண், பெண் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ளும் விதத்தினையும், இருவருக்கும் இடையே இருக்கும் அன்யோன்யம் மற்றும்  தாம்பத்தியம் பற்றி அறிய இப்பொருத்ததைப் பார்க்கிறோம்.
Ø  இருவருக்கும் ஒரே யோனியாகவரின் உத்தமம்.
Ø  இருவருக்கும் வெவ்வேறு யோனியாகவரின் அவை பகை யோனி நிலையில் இல்லாமல் இருந்தால் மத்திமம்.
Ø  இருவருக்கும் பகை யோனியாகவரின் அதமம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியாக மிருகங்கள் உள்ளன. அவை,
    அசுவனி         -  ஆண்குதிரை       சுவாதி            - ஆண் எருமை
   பரணி              -  ஆண் யானை       விசாகம்        - ஆண் புலி
    கார்த்திகை   -  பெண் ஆடு          அனுஷம்        - பெண் மான்
   ரோகிணி        -  ஆண் நாகம்         கேட்டை         - ஆண் மான்
   மிருகசீரிஷம் -  பெண் நாகம்       மூலம்              - ஆண் நாய்
   திருவாதிரை -  பெண் நாய்           பூராடம்          - ஆண் குரங்கு
   புனர்பூசம்      -  பெண் பூனை        உத்திராடம்  - கீரி
   பூசம்                -  ஆண் ஆடு              திருவோணம் - பெண் குரங்கு
   ஆயில்யம்     -  ஆண் பூனை           அவிட்டம்         - பெண் சிங்கம்
   மகம்               -  ஆண் எலி                சதயம்               - பெண் குதிரை
  பூரம்               -  பெண் எலி                பூராட்டாதி      - ஆண் சிங்கம்
  உத்திரம்        -  எருது                         உத்திரட்டாதி - பசு
   ஹஸ்தம்       - பெண் எருமை        ரேவதி               - பெண் யானை
   சித்திரை       - பெண் புலி
பகை யோனிகள்
              கீழ்காணும் மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகை யோனி அமைப்பினை கொண்டதாகும். இவ்வாறு பகை யோனியாக வரும் அமைப்பில் இருந்தால் பொருத்தம் இல்லை.
              குரங்கு         X          ஆடு
              சிங்கம்         X          யானை
              குதிரை         X          எருமை
              பசு                 X          புலி
              எலி                 X          பூனை
              பாம்பு           X          எலி
              கீரி                 X          பாம்பு
              மான்             X          நாய்