புதன், 12 டிசம்பர், 2018

திருமணப்பொருத்தம்



திருமணப்பொருத்தம்


            இப்புவியில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களில் மனித ஜென்மமே மிகவும் சிறப்பு வாய்ந்த ஜென்மமாக கருதப்படுகிறது. ஏனெனில் மனித வாழ்வு சிறக்கவும், பேரின்பத்தினை எய்தவும், நாம் சமுதாயத்தில் தர்ம நெறி தவறாமல் எவ்வாறு கண்ணியம், கட்டுப்பாட்டு தவறாது நம் வாழ்நாளில்  எவ்வாறு வாழ வேண்டுமென்று நம் மூதாததையர் வேதசாஸ்திரங்கள் மூலம் நம் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
            பொதுவாக அனைத்து உயிரினங்களின் நோக்கமும் உண்ண உணவும், தன் இனத்தை மென்மேலும் விருத்தி செய்வதுவுமே ஆகும். அவ்வகையில் நம் மனித இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நம் மானிட உணவு பழக்க வழக்கங்கள் மற்ற உயிரினங்களின் உணவு முறையினைப் போன்றதல்ல, நமது முன்னோர்கள் வகுத்து வைத்த உணவு வழக்க முறையினையே பின் தொடர்கிறோம். அவ்வாறு பின்பற்றாதவர்கள் அல்லது இயலாதவர்கள் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதற்கு  தற்போது பெறுகி வரும் மருத்துவமனைகளே சாட்சி!
            உணவு முறைக்கே நெறிமுறை வகுத்தவர்கள், தமது இனம் தழைக்க வழிகாட்டு முறைகளை வகுக்காமலா இருந்திருப்பார்கள்? எந்த ஒரு உயிரினமும் தழைக்க ஆண் பெண் இணைவு அவசியம் இல்லையா? எனவே தான் இதிலும் ஏனைய உயிரினங்களைப் போல் அல்லாமல் மனித இனத்தில் திருமண வயதை அடைந்த ஆண் பெண் இருவர் இணைவிற்கும் குடும்ப வாழ்விற்கும் நெறிமுறைகள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று  தான் திருமணப் பொருத்த முறையும்.
            மனித வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான மற்றும் வாழ்வினையே மாற்றி அமைக்கும் ஒரு மிக முக்கியமான சுபநிகழ்வாகும். அவ்வாறு சிறப்பு மிக்க திருமண நிகழ்வில் அமையும் வாழ்க்கைத் துணையுடனே வாழ்நாள் நகர்கிறது. அது தனியார் குளிர் சாதன பேருந்திலா அல்லது நடை வண்டியிலா என்பதனை அமையும் வாழ்க்கை துணையே தீர்மானிக்கும்.
            எனவே தான் திருமணத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நம் முன்னோர் திருமணத்தை “ஆயிரம் காலத்துப் பயிர்” என்று அழைத்தனர். நமது வாழ்வு செம்மையுறவும் பின் வரும் நமது சந்ததிகள் சிறக்கவும் திருமணப் பொருத்ததிற்கு முக்கியத்துவம் தருகிறோம்.  
            திருமண பொருத்தம் பார்க்கும் போது ஜாதகங்களை பின்வரும் நிலைகளில் ஆராய்தல் மிக மிக அவசியம். 1) நட்சத்திரப்பொருத்தம் 2) தோஷ சாம்யம் 3) பாவக ஆய்வு 4) தசா மற்றும் புத்தி ஆய்வு. ஆனால் இன்றைய நடைமுறையில் நட்சத்திர பொருத்தத்தை மட்டுமே பார்த்து பல திருமணங்கள் நடக்கின்றன. அவ்வாறு பார்ப்பது சிறப்பல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக