புதன், 12 டிசம்பர், 2018

1. தினப் பொருத்தம்


தினப் பொருத்தம்


              தினப்பொருத்தம் தம்பதியர் ஆரோக்கியதுடனும் தேக சுகத்துடனும் நலமாக வாழ இப்பொருத்தம் அவசியம். பெண்ணின் நட்சத்திரத்திற்கு  2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக ஆணின் நட்சத்திரம் அமைந்தால் தினப்பொருத்தம் உண்டு.
              பெண்ணின் நட்சத்திரத்திரத்திலிருந்து ஆணின் 12வது நட்சத்திரத்தின் 1ம் பாதமும், 14வது நட்சத்திரத்தின் 4ம் பாதமும், 16வது நட்சத்திரத்தின் 3ம் பாதமும் தவிர்த்து ஏனைய பாதங்கள்வரின் மத்திமம்.

Ø             இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், ஹஸ்தம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி அமைந்தால் உத்தமம்.
Ø        இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அசுவனி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் மற்றும் உத்திராடம் அமைந்தால் மத்திமம்.
Ø இருவருக்கும் ஏனைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாகவரின் அதமம்.
              இருவருக்கும் ஏக நட்சத்திரமாக வரும்போது ரஜ்ஜு பொருத்தம் அமையாது, மேலும் இருவருக்கும் ஒரே சமயம் நடப்பு தசா ஒரே தசாவாகவும் அமையலாம். அவ்வாறு அமைந்தால் இருவருக்கும் வாழ்வில் நன்மையும் தீமையும் ஒரே காலகட்டங்களில் ஏற்படும். எனவே இருவருக்கும் ஏக நட்சத்திரமாகவரின் தவிர்த்தல் நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக