கணப் பொருத்தம்
கணப்பொருத்தம்
தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசப்பினைப்புடன் ஒற்றுமையாக வாழவும், குடும்ப வாழ்வில்
இனிமையான சுகபோகங்களை குறைவின்றி பெறவும் கணப் பொருத்தம் இருக்க வேண்டும்.
இருபத்தேழு நட்சத்திரங்களும் தேவ கணம்,
மனுஷ கணம் மற்றும் ராஜஸ கணம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது
ஒரு கணத்திற்கு மூன்று நட்சத்திரங்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில்,
தேவ கண நட்சத்திரங்களாக அஸ்வனி, மிருகசீரிஷம்,
புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும் ரேவதி பிரிக்கப்பட்டுள்ளது.
மனுஷ கண நட்சத்திரங்களாக பரணி, ரோகிணி,
திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி
பிரிக்கப் பட்டுள்ளது.
ராஜஸ கண நட்சத்திரங்களாக கார்த்திகை,
ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில்,
Ø இருவருக்கும் ஒரே கணமாகவரினும், பெண்
மனுஷ கணமாக அமைந்து ஆண் தேவ கணமாகவரினும் உத்தமம்.
Ø பெண்
தேவ கணமாகவோ அல்லது ராஜஷ கணமாகவோ அமைந்து ஆண் ராஜஷ கணமாகவரின் மத்திமம்.
Ø பெண்
தேவ கணமாகவும் ஆண் மனுஷ கணமாகவரினும் மத்திமம்.
Ø
பெண்
மனுஷ கணமாக அமைந்து ஆண் ராஜஷ கணமாகவரின் அதமம்.
Ø பெண் ராஜஷ கணமாக அமைந்து ஆண் தேவ கணமாகவோ
மனுஷ கணமாகவோவரின் அதமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக