புதன், 12 டிசம்பர், 2018

9. இரஜ்ஜு பொருத்தம்


இரஜ்ஜு பொருத்தம்



              ஆண் பெண் இருவரும் தீர்க்காயுளுடன் வாழ இப்பொருத்தம் மிக அவசியம். தசவிதப் பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தம் ஆகும். ஏனைய அனைத்து பொருத்தங்கள் இருப்பினும் இப்பொருத்தம் இல்லையெனில் அவ்விரு ஜாதகங்களை இணைக்கக் கூடாது. இதனை மாங்கல்யப் பொருத்தம் என்றும் அழைப்பர்.
              இரஜ்ஜு ஐந்து வகைப்படும். அவை சிரசு இரஜ்ஜு, கண்ட இரஜ்ஜு, வயிறு இரஜ்ஜு, தொடை இரஜ்ஜு மற்றும் பாத இரஜ்ஜு என்பனவாகும். இருபத்தேழு நட்சத்திரங்களையும் இவ்வைந்து வகை இரஜ்ஜுக்குள் வகைப்படுத்தி உள்ளனர்.
Ø ஆண், பெண் இருவருக்கும் ஒரே இரஜ்ஜுவானால் பொருத்தம் இல்லை.
Ø ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு இரஜ்ஜுவானால் பொருத்தம் உண்டு.
     பொதுவாக இப்பொருத்தம் இல்லையெனில் தம்பதியருக்கு ஆயுள் பங்கம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு பொருந்தாத ஜாதகங்களை இணைக்காமல் இருப்பதே உத்தமம்.

சிரசு இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø  செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் என்பனவாகும்.

கண்ட இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் என்பனவும்,
Ø இராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம்
    ஆகிய ஆறு நட்சத்திரங்களும் கண்ட இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

வயிறு இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் என்பனவும்,
Ø  குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி
    ஆகிய ஆறு நட்சத்திரங்களும் வயிறு இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

தொடை இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம் மற்றும் பூராடம் என்பனவும்,
Ø சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி
  ஆகிய ஆறு நட்சத்திரங்களும் தொடை இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

பாத இரஜ்ஜு நட்சத்திரங்கள்
Ø கேதுவின் நட்சத்திரங்களான அசுவனி, மகம் மற்றும் மூலம் என்பனவும்,
Ø  புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி
 ஆகிய ஆறு நட்சத்திரங்களும் பாத இரஜ்ஜு நட்சத்திரங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக